ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (16:12 IST)
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ 1.43 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ 1,43,612 கோடி ஜிஎச்டி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கடந்த 2021ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதத்தை விட 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம் என மத்திய நிதி அமைச்சகம் தகவல் கூறியுள்ளது
 
அதேபோல் தமிழகத்தில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் ரூ 7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் 2022ஆம் ஆண்டு ஆகஸ்டில் 19% அதிகரித்து ரூ8.386 கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
கொரோனா பாதிப்புக்கு பின்னர் இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்து வருவதாகவும், தொழில்துறை வளர்ச்சி மற்றும் வர்த்தக அளவும் அதிகரித்து வருவதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்