”ஒரே கல்லூரியில் படிக்கும் தந்தை-மகள்”: சட்ட கல்லூரியில் வினோதம்

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (11:57 IST)
மஹாராஷ்டிராவில் மகள் படிக்கும் கல்லூரியிலேயே தந்தை ஜூனியராக படிக்கும் வினோதம் நடந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் ஒரு மாணவி படித்து வருகிறார். இவருடைய தந்தை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். அந்த மாணவிக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர். அந்த பெண்ணின் தந்தைக்கு சட்டம் பயில்வதில் விருப்பம் இருந்துள்ளது. ஆனால் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் சட்டம் பயில இயலவில்லை. தற்போது தன்னுடைய பெண் சட்டக்கல்லூரியில் பயின்று வரும் நிலையில், தந்தை அவருக்கு ஜூனியராக சேர்ந்துள்ளார்.

இது குறித்து அந்த பெண், “என் தந்தைக்கு நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்பது தான் கனவு. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் படிக்க முடியவில்லை. தற்போது தந்தையின் கனவை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது. என் தந்தை என்னுடைய கல்லூரியிலேயே சட்டம் பயின்று வருகிறார். நான் கல்லூரியில் அவரது சீனியராக இருப்பதில் பெருமையடைகிறேன்” என மெய்சிலிர்க்க கூறியுள்ளார்.

மகள் படிக்கும் கல்லூரியிலேயே தந்தை ஜூனியராக பயின்று வரும் சம்பவம் அக்கல்லூரி மாணவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்