ஷேக் ஹசீனா வெளியேறாமல் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருப்பார்: ஃபரூக் அப்துல்லா

Siva
புதன், 7 ஆகஸ்ட் 2024 (15:08 IST)
வங்கதேசத்தை விட்டு ஷேக் அசினா வெளியேறாமல் இருந்திருந்தால் அவரும் கொல்லப்பட்டு இருப்பார் என ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியிட்டதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டம் கலவரமாக மாறியதால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த  நிலையில் ஷேக்  ஹசீனா   தனது பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அவர் இந்தியாவில் இருப்பதாகவும் விரைவில் லண்டன் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷேக் ஹசீனா குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ‘வங்கதேசத்தில் நடந்திருப்பது அந்த நாட்டுக்கு மட்டும் அல்லாது ஒவ்வொரு சர்வாதிகாரிக்கும் ஒரு பாடம் என்று தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு நிலவும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க அவர் தவறவிட்டார் என்றும் பிரதமர் இல்லத்தில் அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக அவரும் கொலை செய்யப்பட்டு இருப்பார் என்றும் தெரிவித்தார்.

ராணுவம் உள்பட யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு இயக்கத்தை மாணவர்கள் முன்னெடுத்தார்கள் என்றும் இது அனைத்து சர்வாதிகாரிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்