ஃபேஸ்புக்கிலும் இனி ஆதாரை இணைக்க வேண்டுமா? புதிய விதியால் பரபரப்பு

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (23:20 IST)
இந்தியாவில் ஆதார் அட்டை என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆதார் அட்டையை கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவுகள் பிறப்பித்துள்ளன

இந்த நிலையில் உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனமும், இந்திய பயனாளிகள் அனைவரும் தங்களுடைய ஃபேஸ்புக் அக்கவுண்டில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

இந்தியாவில் ஃபேஸ்புக் பயனாளிகள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் அக்கவுண்ட்டுக்களை போலியாக வைத்திருப்பதால் இதனை தவிர்க்கவே இந்த அறிவிப்பு என்று கூறப்படுகிறது. மேலும் இப்போதைக்கு மொபைல் மூலம் ஃபேஸ்புக் உபயோகிப்பவர் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க அறிவித்திருப்பதாகவும் கூடிய விரைவில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கும் இந்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பின்பற்றப்பட்டால் இந்தியாவில் போலி ஃபேஸ்புக் அக்கவுண்டே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அறிவிப்பால் போலி ஃபேஸ்புக் அக்கவுண்ட்டுக்கள் வைத்திருப்பவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்