ஈவிஎம் மிஷினில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்..!

Siva
வியாழன், 18 ஏப்ரல் 2024 (12:33 IST)
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கில் அனைத்து விவகாரங்களும் ஏற்கனவே நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது வாக்குப்பதிவு நாளில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில் வைத்து,  ரீசெட் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து விவகாரமும் பொறியாளர்கள் வைத்தும்  சரிபார்க்கப்படும்.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

கேரளா காசர்கோடு பகுதியில் மாதிரி வாக்குப்பதிவின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு எந்திரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு வாக்கு பாஜகவுக்கு கூடுதலாக விழுந்தது என்றும், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞரிடம்  விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளதோடு, தேர்தல் நடவடிக்கைகள் மிகவும் புனிதமானதாக இருக்க வேண்டும் என்றும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்