ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டில் மிகப்பெரிய எழுத்துப்பிழை இருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அதில் எழுத்துப்பிழை இல்லை என்ற கருத்தும் பேசப்படுகிறது.
புதிய 2000 ரூபாய் நோட்டில் இரண்டாயிரம் ரூபாய் என ஹிந்தியில் ‘தன் ஹஸார் ருபயா’ என்று அதில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ‘தோ ஹஸார் ருபயா’ என்பது தான் சரியான வார்த்தை என டுவிட்டரில் கூறிவருகின்றனர். அவசரத்தில் அச்சிடப்பட்டுள்ளதால் இந்த தவறு நடந்துள்ளது எனவும் கூறுகின்றனர்.
ஆனால் அதில் பிழை ஏதும் இல்லை எனவும் அந்த வார்த்தை இந்தி வார்த்தை இல்லை அது கொங்குனி மொழியில் எழுதப்பட்டுள்ளது எனவும், மராத்தி, தேவநாகிரி மொழி எனவும் விளக்கம் அளித்தும் வருகின்றனர் நெட்டிசன்கள்.