ரூ.1500 கோடி மோசடி புகார்: முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ கைது.. அமலாக்கத்துறை அதிரடி..!

Siva

செவ்வாய், 6 மே 2025 (13:55 IST)
ஹரியானா அரசு வீட்டு திட்டத்தின் கீழ் 1,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹரியானா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தரம் சிங் சோகரை, டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
 
61 வயதான இந்த தரம்சிங், புதுடெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில்  கைது செய்யப்பட்டார் என்று அறியப்படுகிறது. அவர்  குருகிராம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 
 
சோகர் பனிபத் மாவட்டம், சமல்கா சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவர் கடந்த ஆண்டு  அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுமாறு அவரது கட்சி தேர்வு செய்யப்பட்டது, ஆனால் அவர் அதில் தோல்வி அடைந்தார்.
 
தரம்சிங் சோகர், அவரது மகன்கள் விகாஸ் சோகர்  மற்றும் சிகந்தர் சோகர் மீது 1,500க்கும் மேற்பட்ட வீட்டுவாடிக்கையாளர்களை தவறாக ஏமாற்றி ரூ.1500 கோடி காசோலைத் தொகைகளை தவறாக கையாண்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சிகந்தர் சோகர் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார், அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தரம்சிங்கை கைது செய்ய நீதிமன்றம்   வாரண்டுகளை பிறப்பித்து,  மே 19-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்