இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்லும் அணைகளை முழுவதுமாக மூடியது இந்தியா.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலின் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீது பல தடைகளை விதித்துள்ள இந்தியா, இங்கிருந்து பாகிஸ்தான் செல்லும் நீர்வழிகளை மூடுவதாக அறிவித்தது.
பாகிஸ்தானின் 90 சதவீத தண்ணீர் பயன்பாடு இந்தியாவிலிருந்து வரும் ஆறுகளை நம்பியே உள்ளதால், நதிநீர் ஒப்பந்த ரத்திற்கு பாகிஸ்தான் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதோடு, நிதிநீரை நிறுத்தினால் போரை தொடங்குவோம் எனவும் மிரட்டல் விடுத்து வந்தது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் செல்லும் நதியில் அமைந்துள்ள பஹலிகார், சலால் என்ற இரு அணைகளையும் இந்திய அரசு மூடியுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆற்றின் வழித்தடத்தின் குறுக்கே புதிய அணைகளை கட்டவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
Edit by Prasanth.K