இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் செயல்பாடுகளில் முறைகேடு செய்துள்ளதாக ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வந்த அவர் அதை ஆதாரங்களோடு இன்று வெளியிடுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறியுள்ளார்.
அதில் அவர் “மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குப்பதிவில் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா மக்களவை தேர்தலுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் இடையேயான 5 மாதங்களுக்குள் 1 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எங்கள் வாதத்தின் மையக்கரு மகாராஷ்டிராதான். பிரச்சினைக்கு காரணம் வாக்காளர் பட்டியல். ஆனால் அந்த வாக்காளர் பட்டியலை எங்களுக்கு தர தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மேலும் வாக்குப்பதிவு நடந்த சிசிடிவி காட்சிகளையும் அழிக்க போவதாக கூறுகிறார்கள்.
மாலை 5.30 மணிக்கு மேல்தான் அதிக வாக்குப்பதிவு நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் வாக்குச்சாவடிகளில் 5.30க்கு மேல் அதிக வாக்குப்பதிவு நடக்கவில்லை. இந்த விஷயங்கள் தேர்தல் ஆணையம் பாஜகவோடு இணைந்து செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K