மகாராஷிடிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசும், ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசும் நடைபெற்று வருகிறது. இந்த அரசுகளின் பதவிக்காலம் நவம்பர் மாதத்தோடு முடிகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா .’இவ்விரு மாநிலங்களுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். அக்டோபர் 24 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 8.94 கோடி வாக்காளர்களும், ஹரியானாவில் 90 தொகுதிகளில் 1.82 கோடி வாக்காளர்களும் உள்ளனர். பதற்றமானத் தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். ’ எனத் தெரிவித்துள்ளார்.