அப்போது ’ கேப்டனாக கோஹ்லி செல்ல வேண்டிய தூரம் உள்ளது. கோலி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் அவர் தன்னை நிரூபிக்க இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டும். கோலி தற்போது ஒரு நாள் தொடர்களில் சிறந்த கேப்டனாக இருக்கிறார் அவர் ரோஹித் ஷர்மா மற்றும் தோனி போன்ற சிறந்த வீரர்களைப் பெற்றிருக்கிறார். உங்களுக்கு ஒத்துழைக்காத வீரர்கள் அணியில் இருக்கும்போதுதான் உங்கள் தலைமைப் பண்பு கவனிக்கப்படும். தோனி மற்றும் ரோஹித் ஐபிஎல் தொடர்களில் என்ன செய்து இருக்கிறார்கள் என்பதை ஆர்.சி.பி. அணியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.’ எனக் கூறியுள்ளார்.