ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை தவறி விழுந்துள்ளார், அவரை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் இறங்கியுள்ளனர். நேற்று இரவு பிஞ்வடியா கிராமத்தில் பழுதை சரி செய்வதற்காக ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாயை வெளியில் எடுத்துள்ளனர். பழுது சரி செய்ய நேரம் எடுத்ததால் கிணற்றை திறந்தபடியே விட்டு சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை அதன் அருகே விளையாடி கொண்டிருந்த நேஹா என்ற 2 வயது குழந்தை தவறி 700 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. அவரை மீட்கும் முயற்சியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.