தெலுங்கானா மாநிலத்தில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட பிராமணர் நலக்கூட கட்டிடத்தை நேற்று முதல்வர் சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் பேசிய போது முதன் முதலில் இந்தியாவில் பிராமண சமுதாயத்திற்காக நலக்கூடம் கட்டப்பட்டது தெலுங்கானா மாநிலத்தில் தான் என்றும் பிராமணர்களில் ஏழைகளும் உள்ளனர் என்றும் இதனால் பிராமண நல திட்டத்திற்காக ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் ஐஐடி ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், தொழில் சார்ந்த படிப்புகள் படிக்கும் பிராமண மாணவ மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை அரசே இனி ஏற்றுக்கொள்ளும் என்றும் பரம்பரை அர்ச்சகர்களின் பிரச்சினைகள் குறித்து வரும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார்.