ஒரே தேர்வு - ஒரே நாள்: அமைச்சர் பொன்முடி தகவல்..!

புதன், 31 மே 2023 (15:03 IST)
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் வெவ்வேறு தினங்களில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஒரே நாளில் ஒரே முறையில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
 
ஒரே தேர்வு ஒரே நாளில் நடத்தப்பட்டு ஒரே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அதேபோல் ஒரே நாளில் உயர் கல்வி சேரிக்கை நடைபெறும் என்றும் இவை அனைத்தும் அடுத்த ஆண்டு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
 
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அதன் உறுப்பு கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி ஒரே நாளில் முடிவுகள் வெளியிடப்படும் என்ற அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்