தி கேரளா ஸ்டோரி ஒரு பிரச்சார படம்… இயக்குனர் அனுராக் காஷ்யப் கருத்து!

செவ்வாய், 30 மே 2023 (15:58 IST)
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமிய மக்களை தவறாக சித்தரிப்பதாக பல அமைப்புகள் அந்த படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தின. ஆனாலும் படம் பல மாநிலங்களில் வெளியானது. சில மாநிலங்களில் மட்டும் தடை செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் ஒரு நாள் மட்டுமே ஓடியது. அடுத்த நாள் முதல் திரையரங்குகளே அந்த படத்தை திரையிடவில்லை. மேற்கு வங்க அரசும் இந்த படத்துக்கு தடை விதித்தது.

இந்நிலையில் மே 12 ஆம் தேதி பல நாடுகளில் ரிலீஸான இந்த படம் நல்ல வசூலை ஈட்டி வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படம் இப்போது வரை 170+ கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாகவும், விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இப்போது இந்த படம் பற்றி பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் அதை ஒரு பிரச்சார படம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் “இப்போது நாம் விரும்பினாலும் நம்மால் அரசியலில் இருந்து தனித்திருக்க முடியாது.  அரசியலற்ற சினிமா என்பது இப்போது கடினமான ஒன்று. தி கேரளா ஸ்டோரி போல ஏராளமான பிரச்சார படங்கள் உருவாகி வருகின்றன. எதையும் தடை செய்ய வேண்டும் என்று சொல்லும் கருத்துக்கு எதிரானவன் நான். ஆனால் இதுபோன்ற பிரச்சார படங்களுக்கு எதிராக பிரச்சார படங்களை எடுக்கவும் நான் விரும்புவதில்லை” எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் கமல்ஹாசனும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பிரச்சார படம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்