படித்தவர்களே அதிக விவாகரத்து பெறுகின்றனர்: உச்ச நீதிமன்றம் தகவல்

Webdunia
சனி, 21 மே 2016 (14:43 IST)
படித்தவர்கள், அதிக அளவில் விவாகரத்து கோருவதாக உச்ச நீதிமன்றம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


 

 
உச்ச நீதிமன்றம் விடுமுறைக் கால அமர்வில் ஒரு விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சாப்ரி மற்றும் அசோக் பூஷண் விசாரணையில் கூறியதாவது:-
 
ஏன் இப்படி படித்தவர்கள், சிறிய காரணங்களுக்காக விவாகரத்து கோருகின்றனர்.
சண்டை போடாமல் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக் கூடாதா என்றனர்.
இதைத்தொடர்ந்து, இவர்களது இரு தரப்பினரும் ஒன்றாக பேசி சமரசம் செய்து வைக்க வேண்டும் என்றும், உங்களை தம்பதியினராகப் பார்ப்பதையே நீதிமன்றம் விரும்புகிறது என்றும் நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.
 
முன்பெல்லாம் திருமண பந்தம் தொடர்பான ஒரு சில வழக்குகள்தான் நீதிமன்றத்துக்கு வரும். ஆனால், தற்போது தனிநபர் உரிமை என்ற பெயரில் பெண்கள், அவர்களுக்கு ஆதரவான சட்டங்களை கொண்டு சிலர் தவறாக பயன்படுத்தி வருவதும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்றவற்றால் நீதிமன்றங்களில் குடும்பப் பிரச்னை தொடர்பான வழக்குகள் தொடர்வதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்