2டிஜி மருந்தை விற்பனை செய்கிறது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (09:26 IST)
2டிஜி மருந்தை விற்பனை செய்கிறது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம்!
கொரோனா வைரஸை குணமாக்கும் மருந்து 2டிஜி மருந்து என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் இந்த மருந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனாவுக்கான 2டிஜி என்ற மருந்தை டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் விற்பனைக்கு கொண்டு வருகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழகம் தயாரித்துள்ள இந்த மருந்துகள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளதால் கொரோனா வைரஸ் இந்தியாவில் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இந்த மருந்தை இந்தியா முழுவதும் சப்ளை செய்யும் என்றும் இந்த மருந்தை கொரோனாவா பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தி குணமாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து வெளிவந்தவுடன் எந்த அளவுக்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்