இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பைக் டாக்சி டிரைவர்.. கணவரின் தந்திரமான சம்பவம்..!

Siva

புதன், 29 அக்டோபர் 2025 (10:43 IST)
சென்னையில், ரேபிடோ பைக் டாக்சியில் பயணித்த திரிபுராவை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவரிடம், ஓட்டுநர் சிவக்குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரவாயலில் இருந்து பள்ளிக்கரணைக்கு அழைத்து சென்ற ஓட்டுநர் சிவக்குமார், பயணத்தின்போது, போரூர் சுங்கச் சாவடி அருகே வண்டியை நிறுத்திவிட்டு, அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக தனது கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினார். உஷாரான அவரது கணவர், ஓட்டுநரை தொடர்புகொண்டு, மனைவியை எம்.எம்.டி.ஏ. காலனிக்கு அழைத்து வர சொல்லி தந்திரமாக வரவழைத்தார். அங்கு காத்திருந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் ஓட்டுநரை பிடித்து வானகரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
 
இதையடுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓட்டுநர் சிவக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பைக் டாக்சியில் பயணிக்கும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்