கடந்த 2019 முதலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பின் அறிகுறியாக காய்ச்சல் இருந்து வரும் நிலையில் கொரோனா பாதித்தவர்கள், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் என அனைவருக்கும் பாராசிட்டாமல் மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2020ல் இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கிய காலம் தொட்டு தற்போது வரை காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்படும் டோலோ மாத்திரைகள் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகம் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 145 மில்லியன் அட்டைகளில் 350 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.