மோடி திரைப்படத்திற்கு தடையா? திமுக புகாரால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2019 (08:53 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'பிஎம் நரேந்திரமோடி' என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் டிரைலர் சுமாராக இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு பிரதமர் வேட்பாளரின் திரைப்படம் வெளிவருவது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம், கட்சி சார்ந்த கதையைக் கொண்டதாக இருப்பதாகவும், அந்த படத்தில் தற்போதைய பிரதமரின் அரசியல் வாழ்க்கை இடம்பெறுவதால் இந்த திரைப்படம் தேர்தல் விளம்பரத்துக்கான ஒரு கருவியாக உள்ளதாகவும் எனவே இந்த படம்  தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் திமுக பொறியாளர் பிரிவின் கோவை மாவட்ட துணைச் செயலர் பி.எஸ்.அரசு பூபதி, மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளித்த மனு ஒன்றை அளித்துள்ளார்.

மேலும் ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படத்தை ஏப்ரல் 12-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதால் அப்படத்தை மே 19-ம் தேதி வரை வெளியிட தற்காலிக தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு பூபதி தனது புகார் மனுவில் கூறியுள்ளார். திமுகவின் இந்த புகாரால் தமிழகத்தில் மோடி திரைப்படம் வெளிவருமா>? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்