துணை முதல்வர் மணீஸ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!

திங்கள், 27 பிப்ரவரி 2023 (16:34 IST)
மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரான நிலையில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை செய்தனர்.

இதனை அடுத்து விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மதுபான கொள்கையில் ஊழல் செய்ததாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் மீது விசாரணை நடத்த டெல்லி மாநில துணைநிலை கவர்னர் உத்தரவிட்டார்.

இந்த வழக்குத் தொடர்பாகச் டெல்லிஅமைச்சர்கள், முதல்வரின் அலுவலர் உள்ளிட்டோரிடம் சில மாதங்களாக விசாரணை செய்து வரும் நிலையில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த சம்மனை ஏற்று மணிஷ் சிசோடியா நேற்று சிபி அலுவலகத்தில் ஆஜர் ஆன நிலையில் அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது.

விசாரணையில் முடிவில் அவர் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததால் காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிஐ முடிவெடுத்து அவரைக் கைது செய்தனர்.

புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரின் மணீஸ் சிசோடியாவை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மணீஸ் சிசோடியாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்