இந்திய அணிக்கு துணைக் கேப்டன் பதவியே தேவையில்லை… ரவி சாஸ்திரி கருத்து!

திங்கள், 27 பிப்ரவரி 2023 (10:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த 2 போட்டிகளையும் இந்திய அணி வென்றுள்ளது. ஆனால் இந்திய அணியில் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தொடக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான கே எல் ராகுக் மீது கடும் விமர்சனங்கள் எழும் அளவுக்கு அவரின் பார்ம் உள்ளது. கிட்டத்தட்ட 47 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் சராசரியாக 33 மட்டுமே வைத்துள்ளார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் இந்தளவுக்குக் குறைவான சராசரி யாருக்கும் இல்லை. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் சுப்மன் கில் போன்ற திறமையான வீரர்கள் இருக்கும் நிலையில் கே எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிப்பது ஏற்புடையதில்லை எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில் ராகுலின் துணைக் கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்திய அணி துணைக் கேப்டன் இல்லாமல்தான் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்குப் புதிய துணைக் கேப்டன் தேவையில்லை என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். அதுபற்றி “இந்திய அணிக்கு துணைக் கேப்டன் வேண்டுமா வேண்டாமா என்பதை அணி நிர்வாகம்தான் முடிவு செய்யவேண்டும். என்னைக் கேட்டால் இந்திய அணிக்கு துணைக் கேப்டன் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்