மின்சாரத்தில் இயங்கும் ராயல் என்ஃபீல்ட் புல்லட்: மாணவர் சாதனை!

திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:49 IST)
மின்சாரத்தில் இயங்கும் ராயல் என்ஃபீல்ட் புல்லட்: மாணவர் சாதனை!
மின்சாரத்தில் இயங்கும் ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை மாணவர் ஒருவர் வடிவமைத்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 
 
டெல்லியை சேர்ந்த மாணவர் ராஜன் என்பவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்தே சிறுவயதில் இருந்தே மின்சாரத்தில் புல்லட்டை இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவருடைய பள்ளி ஆசிரியர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வெறும் 45 ஆயிரம் ரூபாய் செலவில் ராயல் என்ஃபீல்டு பைக்கை மின்சாரத்தில் இயங்கும் விதமாக தற்போது அவர் வடிவமைத்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 
 
இந்த பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் ராயல் என்பீல்டு பைக் கண்டுபிடித்த டெல்லி மாணவருக்கு அவருடைய ஆசிரியர்கள் மற்றும் டெல்லி அரசு பாராட்டுகளை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்