குறிப்பாக இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உயிரியல் மற்றும் தாவரவியல் கேள்விகள் எளிமையாக இருந்ததால் ஓரளவுக்கு சமாளித்து எழுதியதாகவும் இயற்பியல் வேதியியல் கேள்விகள் கடினமாக இருந்ததால் யோசித்து எழுத வேண்டிய நிலை இருந்ததால் அனைத்து கேள்விகளும் எழுதி முடிக்க நேரம் போதவில்லை என்று மாணவர்கள் கருத்து கூறியுள்ளனர்