மூலிகை செடியில் ஹெராயின் கலந்து கடத்தல்! – மும்பையில் சிக்கிய மர்ம கண்டெய்னர்!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (15:09 IST)
மும்பையில் மூலிகை செடியில் ஹெராயின் கலந்து கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை நகரில் உள்ள நவஷேவா துறைமுகத்தில் பெரிய கண்டெய்னர் ஒன்று சமீபத்தில் வந்திறங்கியுள்ளது. அந்த கண்டென்ய்னர் குறித்து டெல்லி சிறப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து துறைமுகம் சென்று கண்டெய்னரை பரிசோதித்த அதிகாரிகள் அதில் அதிமதுரம் என்ற மூலிகை செடிகளை கண்டறிந்துள்ளனர். அவற்றை சோதனை செய்ததில் அவற்றின் மீது கொக்கெய்ன் என்ற போதை பொருள் பூசப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

ALSO READ: பாஜகவின் வேதப்புத்தகம் பகவத்கீதை அல்ல: காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

இதையடுத்து கண்டெய்னரை போலீஸார் சீல் வைத்து பறிமுதல் செய்துள்ளனர். சுமார் 22 டன் அளவு கிடைத்துள்ள இந்த போதை பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.1,725 கோடி என கூறப்படுகிறது. இந்தியாவிற்குள் பெரிய அளவில் போதை பொருட்கள் நுழைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்