தலைநகர் டெல்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த சுனில் என்பவர் தன்னுடைய 12 வயதில் பிழைப்புக்காக டெல்லி வந்துள்ளார். இவருக்கு தற்போது திருமணமாகி மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர் கடந்த நாடே அதிர்ச்சியுறும் வகையில் கடந்த 14 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறிய வயதிலேயே காம கொடூரனாக இருந்த சுனில் பள்ளியில் படிக்கும் மாணவிகளையே குறித்து பலாத்காரம் செய்து வந்துள்ளான். 7 முதல் 10 வயதிலான மாணவிகளையே குறி வைத்து செயல்பட்டுள்ளான். பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவிகளிடம் தெரிந்தவர் போல பேச்சுக்கொடுத்து அவர்களை ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதே போல தொடர்ந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சுனில் கடந்த 2004-ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட கையும் களவுமாக பிடிபட்டு தர்ம அடிவாங்கினார்.
இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி 2 பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்தனர். அதில் தங்கள் பிள்ளைகள் பள்ளி முடிந்து வரும் போது யாரோ மர்ம நபரால் கடத்தில் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த போது சுனில் தான் மாணவிகளை கடத்தில் பலாத்காரம் செய்து வந்துள்ளான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுனிலை அதிரடியாக கைது செய்து அவனிடம் விசாரணை நடத்தில் வாக்குமூலம் பெற்றனர். அதில் கடந்த 14 ஆண்டுகளாக தான் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட சுனில் ஒப்புக்கொண்டுள்ளார்.