எல்லா நிறுவனங்களையும் மூடுங்க.. வீட்டிலிருந்தே வேலை! – டெல்லி முதல்வர் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:52 IST)
டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தனியார் நிறுவனங்களை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா ஆகிய இரண்டு வகை வைரஸ்கள் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 1.5 லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளன. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊரடங்கு நாட்களில் செயல்பட அனுமதிக்கப்பட்ட அலுவலகங்கள் தவிர அனைத்து தனியார் நிறுவனங்களையும் மூடவும், பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறையை அமல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து உணவகங்கள் மற்றும் பார்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்