இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 8 லட்சத்தை தாண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 1.50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.