மனைவியை வற்புறுத்தி செக்ஸ் வைத்தால் பலாத்காரமே - நீதிமன்றம் அதிரடி

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (14:28 IST)
கணவன் அழைக்கும் போதெல்லாம் உடலுறவுக்கு மனைவி தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்யப்படுவது அல்ல என டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

 
மனைவியின் விருப்பம் இல்லாமல், அவரை மிரட்டி உடலுறுவு வைத்துக்கொள்ளும் கணவன்கள் மீது பாலியல் பலாத்கார தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கை நீதிபதிகள் கீதா மிட்டல், ஹரி சங்கர் அமர்வு விசாரித்தது. அப்போது கருத்து கூறிய நீதிபதிகள் “மனைவியை கொடுமை படுத்துவர்களை தண்டிக்க ஏற்கனவே சட்டம் இருக்கிறது. எனவே, உடலுறவு நடவடிக்கைகளை பலாத்காரம் என வரைமுறை செய்தால் குழப்பம் ஏற்படும். திருமணம் செய்துவிட்டால் கணவன் உடலுறவுக்கு அழைக்கும் போதெல்லாம் மனைவி அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என அவசியம் இல்லை. விருப்பம் இல்லையெனில் அதை மறுக்கும் உரிமை மனைவிக்கு இருக்கிறது.

 
உடலறவுக்கு மனைவி தயாராக இருக்கிறார் என்பதை கணவன் உறுதி செய்ய வேண்டியது அவசியம். அதேசமயம் மனைவியை மிரட்டி கணவன் உடலுறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும். பலாத்காரம் எனில், பெண்ணின் உடலில் காயங்கள் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. விருப்பம் இல்லாமல் உடலுறவு கொள்வதே பலாத்காரம்தான் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்