பாஜக கூட்டணியில் என்னை சேர வலியுறுத்துகிறார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!

Siva

ஞாயிறு, 4 பிப்ரவரி 2024 (15:49 IST)
பாஜக கூட்டணியில் என்னை சேர வலியுறுத்துகிறார்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
ஊழல் குற்றச்சாட்டில் அரவிந்த் கெஜரால் சிக்கி இருக்கும் நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு பாஜகவில் சேர அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்  குற்றம் சாட்டியுள்ளார்.  
 
மத்திய பாஜக அரசு எங்களுக்கு எதிராக எந்தவிதமான சதி செய்ய முயன்றாலும் அதற்கு அடிபணிய மாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறார்கள் என்றும்  தன்னிடம் அது பலிக்காது என்றும்  எந்த சிக்கல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். 
 
பாஜகவில் சேர சொல்லி தனக்கு அழுத்தம் தருகிறார்கள் என்று டெல்லி முதலமைச்சர்
கெஜ்ரிவால்  கூறியுள்ளது இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்