குழந்தையை போராடி மீட்ட தாய்: பெரியப்பாவே கடத்த முயன்றது அம்பலம்!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (10:45 IST)
டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு குழந்தையை கடத்த முயற்சித்த வீடியோ வைரலான நிலையில், கடத்தல் முயற்சியில் ஈடுப்பட்டது குழந்தையின் பெரியப்பா என தெரிய வந்துள்ளது.

கடந்த சில தினங்கள் முன்னர் டெல்லியில் ஷாஹர்பூர் பகுதியில் உள்ள துணிக்கடை உரிமையாளர் வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்ட மர்ம ஆசாமிகள், அந்த பெண் தண்ணீர் எடுக்க சென்றபோது குழந்தையை கடத்த முயன்றனர். உடனடியாக சுதாரித்த தாய் குழந்தையை மீட்டதுடன், அவர்களையும் பிடிக்க முயன்றார். அக்கம்பக்கத்தினரும் பெண்மணிக்கு உதவியாக அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் ஹெல்மெட் மாட்டிய ஆசாமிகள் பைக்கை விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

அந்த தெருவில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் கடத்தல்க்காரர்கள் விட்டு சென்ற பைக் மற்றும் அதிலிருந்த துப்பாக்கி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டதில் தீரஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். குழந்தையை கடத்த முயன்றது, அந்த குழந்தையின் பெரியப்பா தீரஜ் என தெரியவந்துள்ளது. துணிக்கடை உரிமையாளரான தனது தம்பியிடமிருந்து குழந்தையை கடத்தி பணம் பறிக்க அவர் திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்