வங்கி கடனை செலுத்த முடியவில்லை.. 7 பேர் தற்கொலை விவகாரத்தில் உருக்கமான கடிதம்..!

Siva

செவ்வாய், 27 மே 2025 (13:27 IST)
நேற்றிரவு இரவு ஹரியானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் தற்கொலை செய்த சம்பவத்தில் காரில் இருந்து இரண்டு பக்கங்கள் கொண்ட தற்கொலைக் குறிப்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் நாங்கள் வங்கியில் கடன் வாங்கி கட்ட முடியாத நிலையில் உள்ளோம், எனவே தற்கொலை செய்து கொண்டோம் என உருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.  
 
அந்த குடும்பத்தின் ஆறு உறுப்பினர்கள் காருக்குள் இறந்த நிலையில் உள்ளூர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்டனர். ஏழாவது நபரான பிரவீன் மித்தல், அந்த  காருக்கு அருகில் உள்ள நடைபாதையில் உட்கார்ந்திருந்தார். அவர், "அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள், நான் ஐந்து நிமிடங்களில் இறந்துவிடுவேன்," என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும், மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
 
உயிரிழந்தவர்களில் பிரவீன் மித்தல் என்பவர் குடும்பத்தலைவர், அவரது மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும்  பெற்றோர் ஆகியோர் ஆவர்.
 
போலீசார் தெரிவித்ததாவது, மித்தல் மற்றும் அவரது குடும்பம் பகேஷ்வர் தாமில் நடைபெற்ற ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வழியில்தான் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
 
மேலும் மித்தல் டேராடூனில் ஒரு டூர் மற்றும் டிராவல்ஸ் தொழிலத்தை தொடங்கி இருந்தார். ஆனால் அது தோல்வியடைந்து, குடும்பம் கடனில் மூழ்கியது. வங்கியில் வாங்கிய கடனையும் செலுத்த முடியவில்லை என்றும் கடன் கொடுத்தவர்களின் நெருக்குதல் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
 
அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்