இறப்பு சான்றிதழை பெற்று கொள்ளுங்கள்: உயிரோடு இருப்பவருக்கு போன் செய்து கூறிய அதிகாரி!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (19:31 IST)
இறப்பு சான்றிதழை பெற்று கொள்ளுங்கள்: உயிரோடு இருப்பவருக்கு போன் செய்து கூறிய அதிகாரி!
உயிருள்ள ஒருவரிடம் போன் செய்து உங்களுடைய இறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே என்ற பகுதியை சேர்ந்த ஆசிரியர் சந்திரசேகர். இவர் உயிரோடு இருக்கும் நிலையில் திடீரென அந்த பகுதியில் நகராட்சி நிர்வாகம் போனில் அழைத்தனர். அந்த அழைப்பில் உங்களுடைய இறப்புச் சான்றிதழ் தயாராகிவிட்டது, உடனே வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்தனர் 
 
நான் உயிரோடு இருக்கும்போது தன்னிடமே இறப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க தானே நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்