மகளின் குழந்தைக்கு தந்தையான தந்தை

Webdunia
சனி, 17 செப்டம்பர் 2016 (18:28 IST)
மகராஷ்டிரா மாநிலத்தில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து குழந்தை பெற செய்த காம கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.


 

 
மகராஷ்டிரா மாநிலம் நலசோப்பாரா அருகேயுள்ள வாசாய் பகுதியை சேர்ந்த மீனா என்பவர் சிறிது வயதிலே தாயை இழந்து தந்தை அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
 
மீனா பருவ வயதை எட்டியவுடன் காம வெறிப்பிடித்த தந்தை, மீனாவை கட்டாயப்படுத்தி, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு மூன்று முறை நாட்டு மருந்து கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளார்.
 
ஆனால் எல்லாவற்றையும் மீறி மீனா கருதரித்து 20 வயதில் குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள். இச்செய்தி அறிந்த மீனாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரின், அந்த காம கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.
 
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
அடுத்த கட்டுரையில்