தாயின் கண்முன் மகள் பாலியல் வன் கொடுமை...போலீஸார் விசாரணை

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (17:33 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் தாயின் கண் முன் 5 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் ஒரு சிறுமி தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தியோகரில் ஒரு திருவியழ முடிந்து இருவரும் வீட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, மதுப்பூர் பகுதியில் அவர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய ஒரு மர்ம கும்பல், அவர்களை கடத்தி வன் கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்துள்ளார். அதில், பைக்கில் வந்த ஐந்துபேர் கொண்ட கும்பல் எங்களை வழிமறித்து, என் மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். அவர்களைத் தடுக்க முற்பட்டபோது, என்னைத் தாக்கி, என் கண் முன் மகளை வன் கொடுமை செய்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்