பள்ளியில் அமர்ந்து பாடம் படிக்கும் குரங்குகள்....வைரலாகும் வீடியோ

சனி, 17 செப்டம்பர் 2022 (22:17 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக் நகரில் உள்ள ஒரு  பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து ஒரு குரங்கு பாடத்தைகவனிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு நாளும் இந்த உலகில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது  அங்கு வந்த குரங்கும் பாடத்தை கவனித்தது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு,  அந்தப் பள்ளியில் புதிதாக இணைந்த மாணவர் என்று பதிவிட்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக,  சில குரங்குகள் இணைந்து ஒரு ஸ்மார்ட் போனை பயன்படுத்திய வீடியோ ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலானது.

அதேபோல், சில  நாட்களுக்கு முன், ஒரு குதிரை பேருந்தில் வரையப்பட்டிருந்த குதிரையைத் தன் தாய் என்று பேருந்துடன் ஓடியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்