பெங்களூரில் கடன் வாங்கியதை திருப்பிக் கொடுப்பது குறித்த பிரச்சினையில் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் கணவன் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் விஜய் மற்றும் வித்யா தம்பதிகள் தாங்கள் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்துவது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபட, அப்போது விஜய் தன் மனைவி வித்யாவின் மூக்கை கடித்து துப்பியதாகவும், வித்யாவின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வந்து கணவன் மனைவி சண்டையை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மூக்கில் படுகாயம் அடைந்த வித்யா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.