தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி, அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த முறை, அவர் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி 30 வயதிற்கு உட்பட்ட 130 இளைஞர்களை தேர்தல் களத்தில் இறக்க உள்ளதாக சீமான் கூறியுள்ளார். உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இதுவரை மொத்தம் 130 இளைஞர்களை அவர் தேர்வு செய்துள்ளார். இவர்களில், 65 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருச்சியில் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இது, தமிழக அரசியலில் ஒரு புதிய தலைமுறை வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியாக கருதப்படுகிறது.