தேர்தல் தூதுவராக நியமனம் செய்யப்பட்ட திடீர் கோடீஸ்வரி!

Webdunia
வியாழன், 3 அக்டோபர் 2019 (08:22 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடத்திய ’கோன் பனே கா குரோர்பதி’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்ற பெண் தேர்தல் விழிப்புணர்வு தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி என்ற பகுதியை சேர்ந்த பாபிதா தாடே என்ற பெண் சமீபத்தில் இந்தி தொலைக்காட்சி ஒன்றில் அமிதாப் நடத்தி வரும் கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் அமிதாப் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றிருந்தார்.

அரசுப் பள்ளி ஒன்றில் சத்துணவு ஊழியரக பணிப்புரிந்து வரும் பாபிதா தாடேவுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அமராவதி மாவட்டம் முழுவதும் புகழ் பெற்றார்.

இந்த நிலையில் அமராவதி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு தூதராக பாபிதா தாடே  நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை அம்மாவட்ட தேர்தல் அதிகாரி நியமித்து, அமராவதி பகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் அதிகளவில் வந்து வாக்கு அளிக்க விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி நல்ல முறையில் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்