சரக்கு சப்ளை; பினராயியின் ஐடியாவுக்கு கோர்ட் தடை!

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (14:37 IST)
ஊரடங்கு காலத்தில் மது வழங்கலாம் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே இருக்கிறது. வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
 
இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக மது கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் மதுவுக்கு அடிமையானவர்கள். 
 
இந்நிலையில் மது கிடைக்காத அதிருப்தியில் கேரளாவில் சிலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த விஷயம் இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில் கேரள அரசு, மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானங்களை வழங்கலாம் என முடிவெடுத்துள்ளது. 
 
ஆனால் இதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்கனவே தடைபோட்டுள்ளது. அந்த வகையில் தற்போது ஊரடங்கு காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற கேரள அரசின் உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்