தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதி!!

வெள்ளி, 27 மார்ச் 2020 (12:43 IST)
தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
சீனாவில் யூகான் பகுதியில் உருவெடுத்த கொரோனா வைரஸ் அங்கு 3,287 உயிர்களை பறித்து தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா தொற்று யாருக்கும் இல்லை, மேலும் அங்கு இயல்பு நிலையும் திரும்பியுள்ளது. 
 
ஆனால், தற்போது கொரோனா உலகம் முழுவதும் அதீத உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 22,000 ஆக இருந்த நிலையில், தற்போது 24,000 ஆக அதிகரித்துள்ளது. அதாவது உலக அளவில் ஒரே நாளில் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
குறிப்பாக இந்தியாவை பொருத்த வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
மதுரையில் ஏற்கனவே கொரோனா தொற்று இருந்தவரின் குடும்பத்தில் மேலும் இருவருக்கும், ஈரோடு மற்றும் சென்னையில் தலா இருவரும் என 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்