தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பு தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என் தீர்பளிக்கபட்டார்.
2006 ஆம் ஆண்டு, தொடங்கப்பட்ட இந்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்கள் கலவர பூமியாக மாறியது. கலவரத்தில் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கின் தண்டனை விவரத்தை நீதிபதி வெளியிட்டுள்ளார். சிபிஐ, ராம் ரஹிம் சிங்கிற்கு 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க கோரிய நிலையில், நீதிமன்றமும் அதே போல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.