காந்திக்கு பாரத ரத்னா வழங்க நீதிமன்றம் மறுப்பு !

சனி, 18 ஜனவரி 2020 (11:51 IST)
தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்தியாவின் மிக உயரிய விருதாக இந்திய குடிமகன் ஒருவருக்கு வழங்கப்படும் விருதாக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு வழங்க வேண்டும் என அனில் தத்தா ஷர்மா என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ‘காந்திக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது. மகாத்மா முன்னால் பாரத ரத்னா விருதெல்லாம் பெரிதா ?’ எனக் கேள்வி எழுப்பினர்.

இதைக்கேட்ட மனுதாரர் ‘அப்படியானால் மகாத்மா பாரத் ரத்னாவை விட சிறந்தவர் என்று மரியாதை செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கூறினார். அதற்குப் பதிலளித்த நீதிமன்றம் ‘அதுபற்றி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் மனுதாரர் முறையிடலாம் என அறிவுறுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்