உலக அளவில் மூன்றாவது இடத்தை நோக்கி இந்தியா! – 20 ஆயிரத்தை நெருங்கிய பலி

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (10:32 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்திற்குள் புதியதாக ஒரு லட்சம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து கட்ட ஊரடங்குகளும் முடிந்து விட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புகள் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் நான்காம் இடத்தில் இருந்த இந்தியா, ரஷ்யாவை தாண்டி மூன்றாம் இடத்தை அடைய உள்ளது.

ஒரே நாளில் 21 அயிரத்திற்கும் மேற்பட்டோர்ப் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,73,165ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,09,083 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,00,064 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,671 பேர் பலியான நிலையில் 1,08,082 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியல்.

தமிழ்நாடு – 1,07,001
டெல்லி – 97,200
குஜராத் – 35,312
உத்தர பிரதேசம் – 26,554
மேற்கு வங்கம் – 21,213
தெலுங்கானா – 22,312
ராஜஸ்தான் – 19,532
மத்திய பிரதேசம் – 14,604
கர்நாடகா – 21,549
ஹரியானா – 16,548

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்