தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது - பதற வைக்கும் இந்திய நிலவரம்!

திங்கள், 5 ஏப்ரல் 2021 (10:02 IST)
இந்தியாவில் முதன் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில், புதிதாக 1,03,558  பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,89,067 ஆக உயர்ந்தது. புதிதாக 478 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,65,101 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 52,847 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,16,82,136 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,41,830 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்