சினிமாதான் நமக்கு சோறு போடுகிறது… விமர்சகர்களுக்கு சுல்தான் தயாரிப்பாளர் பதில்!

திங்கள், 5 ஏப்ரல் 2021 (09:15 IST)
சுல்தான் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பதிலளித்துள்ளார்.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படம் ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலிஸானது.

கார்த்தி மற்றும் ராஷ்மிகாவுக்காக மிக நல்ல ஓபனிங் இருந்தாலும், படத்தின் கதை மற்றும் திரைக்கதையால் கடுப்பான ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல இணைய விமர்சகர்களும் இந்த படத்தைக் கழுவி ஊற்ற ஆரம்பித்துவிட்டனர்.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக சுல்தான் படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தனது முகநூல் பக்கத்தில் ‘ எங்கள் திரைப்படங்களை விமர்சகர்கள் ஆதரித்திருக்கிறார்கள். ஆனால் சுல்தான் படம் சிலருக்கு வேறுவிதமான அபிப்ராயங்களைக் கொடுத்திருக்கலாம். நான் அதையும் மதிக்கிறேன். ஆனால் உங்கள் வார்த்தைகளில் கண்ணியத்தைக் கடைபிடியுங்கள்.  ஏனென்றால் திரைப்படங்கள்தான் எனக்கும் உங்களுக்கும் சோறு போடுகின்றன’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்