8 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – மீண்டு வரும் இந்தியா!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (10:47 IST)
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தினசரி கொரோனா பாதிப்புகள் தற்போது 20 ஆயிரத்திற்குள் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்தது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 8,813 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,42,77,194 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,27,098 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,36,38,844 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,11,252 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்