கொரோனா : மக்களின் பசியைப் போக்க உதவும் பிரசாந்த் கிஷோரின் ’’ஐ-பேக்’’

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (15:52 IST)
இந்த நிலையில், தேசம் முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் பல தொழில்களை செய்ய முடியாமல் கஷ்டத்தில் உள்ளனர்.

இதற்கு,நாட்டில் உள்ள தொழிலதிபர்கள், நடிகர், விளையாட்டு நட்சத்திரங்கள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் பிரபல அரசியல் ஆலோசகரும், ஐபேக் நிறுவனத்தில் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் , வீடில்லாத ஏழைகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளின் பசியைப் போக்க அவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் அனைவருக்கும் அன்னம் எனும் சேவையை  நாளை முதல் 10 நாட்களுக்கு தமிழகத்தில் துவங்குகிறது.

இந்தியாவில் உள்ள 25 பெருநகரங்கலில் தினமும் 1,50 ஆயிரம் உணவுப்பட்டலங்கள் வீதம் 10 நாட்களில் 15 லட்சம் உணவுப்பொட்டலங்களை ஐபேக் நிறுவனம்  வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலில், தமிழகத்தில் திமுகவிற்கு அரவியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்