1,000-த்திற்கும் மேல் சென்ற தினசரி பாதிப்பு: இந்திய நிலவரம்!

சனி, 9 ஏப்ரல் 2022 (09:42 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து முடிவை எட்டி வருகிறது.


 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,150 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,34,217 ஆக உயர்ந்தது.
 
மேலும், புதிதாக 83 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,21,656 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,194 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,01,196 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,365 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,85,55,07,496 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 14,79,544 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்