மூன்றே ஆண்டுகளில் 5 மடங்கு சைபர் குற்றங்கள்! – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (14:59 IST)
இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் சைபர் குற்றங்கள் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும் அதேசமயம் அதுசார்ந்த குற்றவியல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக இணையவழி பண திருட்டு, மோசடிகள், ஆபாச மிரட்டல் உள்ளிட்டவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் தகவல் தொடர்பு பாதுகாப்பு அம்சங்களை கண்காணித்து வரும் மத்திய அரசின் ஏஜென்சியான செர்ட் சைபர் குற்றங்கள் தொடர்பான தரவுகளை நாடாளுமன்ற குழுவிடம் அளித்துள்ளது. அதன்படி கடந்த 2018ல் பதிவான சைபர் குற்றங்கள் குறித்த வழக்குகளின் எண்ணிக்கை 2,08,456. கடந்த 2021ல் 14,02,809 ஆக இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 2,12,485 வழக்குகள் பதிவாகியுள்ளன.

சைபர் குற்றங்களை தடுக்க மத்திய அரசு 7 ஆயிரத்திற்கும் அதிகமான காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து வருவதுடன், மக்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்